\
திருமூர்த்தி அணை: உறவினர் கண்முன்னே உயிரிழந்த இளைஞர் - அணையில் குளிக்கச் சென்றபோது சோகம்

திருமூர்த்தி அணை: உறவினர் கண்முன்னே உயிரிழந்த இளைஞர் - அணையில் குளிக்கச் சென்றபோது சோகம்

திருமூர்த்தி அணை: உறவினர் கண்முன்னே உயிரிழந்த இளைஞர் - அணையில் குளிக்கச் சென்றபோது சோகம்
Published on

திருமூர்த்தி அணையில் குளிக்கச் சென்ற இருபது வயது இளைஞர் உறவினர் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைப்பகுதியில், கார்த்தி என்ற 20 வயது இளைஞர் தன் உறவினரான மாற்றுத்திறனாளி சகோதரருடன் குளிக்க சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற கார்த்தி வெகுநேரமாகியும் திரும்பாததால் கரையில் காத்திருந்த உறவினர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார்.

இதனையடுத்து அணையில் இறங்கிய அவர்கள் நீண்ட நேரம் தேடிபார்த்திவிட்டு பின்னர் உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிட்டத்தட்ட 2 மணி நேர போராட்டத்திற்கு இளைஞனை சடலமாக மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com