தமிழ்நாடு
'தம்பி... உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான சகோதரர்களில் நானும் ஒருவன்' - நடிகர் சத்யராஜ்
'தம்பி... உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான சகோதரர்களில் நானும் ஒருவன்' - நடிகர் சத்யராஜ்
'தம்பி உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான சகோதரர்களில், ரசிகர்களில் நானும் ஒருவன்' என்று இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ்.
நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சத்யராஜ். அந்த வீடியோவில் சத்யராஜ் பேசுகையில், ''சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து 'சின்னக் கலைவாணர்' என்று பெயர் வாங்கியவர் என் அன்பு தம்பி விவேக். மறைந்துவிட்டார் என்கிற வார்த்தையை பயன்படுத்த மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.
அவர் நம்முடன் இல்லாமல் போனதற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வெறும் வார்த்தைகளால் அவரது குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ, கலையுலகிற்கோ ஆறுதல் படுத்திவிட முடியாது. தம்பி உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான சகோதரர்களில், ரசிகர்களில் நானும் ஒருவன்'' என்று அந்த வீடியோவில் உருக்கத்துடன் பேசியுள்ளார்.