தமிழ்நாடு
தமிழகத்தின் பிரியாணி வருவாய் எவ்வளவு தெரியுமா ?
தமிழகத்தின் பிரியாணி வருவாய் எவ்வளவு தெரியுமா ?
தமிழகத்தில் பிரியாணி விற்பனையால் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிரியாணி என்றால் முதலில் அனைவரின் எண்ணங்களுக்கு வருவது ஆம்பூர் பிரியாணி தான். அதேபோல, இந்தியளவில் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரியாணி எனப்படுவது ஐதராபாத் தம் பிரியாணி தான். ஆனால் தற்போது பிரியாணிக்கென்றே நிறையே கடைகள் வந்துள்ளன. இதனால் பிரியாணி சாப்பிடுவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 300க்கும் அதிகமான கடைகள் பிரியாணிக்கென்றே பெயர் பெற்றவை. இவை தவிர சிறு சிறு கடைகளிலும் நாள்தோறும் விற்பனை களைகட்டுகின்றன. பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இன்னும் 100 பிராண்டுகள் வந்தால் கூட அவை விற்பனையாகும் என்கின்றனர் பிரபல பிரியாணி கடை உரிமையாளர்கள்.