\
கனமழையால் இடிந்து விழுந்தது பாலம்: போக்குவரத்து துண்டிப்பு

கனமழையால் இடிந்து விழுந்தது பாலம்: போக்குவரத்து துண்டிப்பு

கனமழையால் இடிந்து விழுந்தது பாலம்: போக்குவரத்து துண்டிப்பு
Published on

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கனமழை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் பச்சமலைப் பகுதியில் கனமழை பெய்ததால் கானபாடி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நரசிங்கபுரத்திலிருந்து ஒட்டம்பட்டிக்குச் செல்லும் சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் வராததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதே நேரத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழை‌ பெய்து கானபாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com