அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சோகம்

அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சோகம்
அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சோகம்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.


விழுப்புரம் மாவட்டம் மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர் ஐயனார். இவர் திருப்போரூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு வரும் பிப்ரவரி 12ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆகவே அவர் தன்னுடைய திருமணத்திற்காக அழைப்பிதழை அனைவருக்கும் கொடுத்து வந்தார்.

இன்று திண்டிவனத்திலிருந்து மதுராந்தகம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வரும் போது சிறுநாகலூர் என்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஐயனார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனை அடுத்து அவரது உடல் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ஐயனார் உடலை பார்த்து அவர்கள் கதறி அழும் காட்சி, பலரது மனதை உலுக்கியது. இந்தச் சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com