அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெறப்படுகிறது: ஒப்புக்கொண்ட சுகாதாரப் பிரிவு இணை இயக்குநர்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவப்பகுதியை தவிர வேறு எங்கும் லஞ்சம் பெறுவதில்லை என சுகாதாரப் பிரிவு இணை இயக்குநரே தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட திருப்பதி என்பவரிடம், பிறந்த குழந்தையை காண்பிப்பதற்கு லஞ்சம் கேட்டதாக பாதிக்கப்பட்டவர் வீடியோ ஆதரத்துடன் மாவட்ட சுகாதார இயக்குநரிடமும், சமூக ஆர்வலர்கள் முதல்வர் தனிப்பிரிவிற்கும் மனு அளித்தனர். இதையடுத்து, மாவட்ட சுகாதாரப் பிரிவு இணை இயக்குனர், புகார் அளித்த சமூக ஆர்வலர்களிடையே விசாரணை நடத்தினார். பிரசவப் பகுதியை தவிர எங்கும் லஞ்சம் வாங்குவதில்லை என்றும், ஒரு சில ஒப்பந்த ஊழியர்கள்தான் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி செய்வதாகவும் அவர் கூறினார். இதை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் கூறுவதை சமூக ஆர்வலர்கள் கைபேசியில் பதிவு செய்துள்ளனர்.