தமிழ்நாடு
கோயம்பேடு : வாகனங்களை வழிமறித்து லஞ்சம் பெறும் போலீசார் (வீடியோ)
கோயம்பேடு : வாகனங்களை வழிமறித்து லஞ்சம் பெறும் போலீசார் (வீடியோ)
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்குள் செல்லும் வாகனங்களை மறித்து போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. காய்கறி ஏற்றிச்செல்லும் வாகனங்களை நிறுத்தச்சொல்லி, அங்கிருக்கும் இரண்டு போக்குவரத்து காவலர்கள் லஞ்சம் பெறும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. கோயம்பேட்டிற்கு வரும் வாகனங்களை பொறுத்து போலீசார் பணம் பெறுவதாகவும், இதனால் மார்க்கெட்டிற்கு காய்கறி ஏற்ற வருவதற்கே அச்சமாக இருப்பதாகவும் வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.