பேனாவை உடைப்பியா? அதிகாரம் வரும்போது அடையாளங்களை உடைப்பேன் - சீமான்

பேனாவை உடைப்பியா? அதிகாரம் வரும்போது அடையாளங்களை உடைப்பேன் - சீமான்
பேனாவை உடைப்பியா? அதிகாரம் வரும்போது அடையாளங்களை உடைப்பேன் - சீமான்

மோடி ஆவணப்படத்தை வெளியிட்டதால் மிரட்டுவதற்காக பிபிசி அலுவலகத்தில் ரெய்டு விடப்பட்டுள்ளது முடிந்தால் என் வீட்டுக்கு அனுப்புங்கள் நானும் அப்படத்தை ஒளிபரப்பினேன் என ஈரோட்டில் நாம் தமிழர் ஒருஙகிணைப்பாளர் சீமான் சவால் விடுத்தார்

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். இதையடுத்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், நான் ஒருவன் தான் உங்களுக்காக நிற்பேன் ஆனால் என்னைத் தவிர மற்றவர்களுக்கு ஓட்டு போடுவீர்கள். நான் உங்கள் ஓட்டுக்கானவன் அல்ல நாட்டுக்கானவன்.

எனக்கு ஓட்டுப் போடவில்லை என்றாலும் பரவாயில்லை. மறுமையில். கடவுளுக்கு பதில் சொல்ல நேரிடும் என பேசிய அவர் சாத்தான் கதையை சொல்லி திமுக அதிமுகவை விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர்...நாம் தமிழருக்கு ஓட்டுப் போட்டால் பாஜக வந்துவிடும் என பொய் பரப்புரை செய்கிறார்கள். நல்ல ஆண் மக்களாக இருந்தால் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் என்னை ஜெயித்து காட்டுங்கள். முடிந்தால் கட்டுத் தொகையை வாங்கிக் காட்டுங்கள்.

எந்த நம்பிக்கையில் தனித்துப் போட்டியிடுவதாக கேள்வி எழுப்புகின்றனர். எனது மக்கள் என்னை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் தனித்துப் போட்டியிடுகிறேன். உயிருள்ள எதையும் சின்னமாக தர முடியாது என சொன்னவர்கள் விவசாயி சின்னத்தை கொடுத்தார்கள். தங்கள் உயிரை கொடுத்தாவது விவசாயத்தை காப்பார்கள் என தந்தார்கள்.

உதயசூரியன் இரட்டை இலைக்கு போட்டேன் என்று சொல்லி சொல்லி எங்களை நடுத்தெருவில் போட்டுவிட்டார்கள். 50 ஆண்டுகளாக செய்யாததை இந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜெயித்து செய்யப் போறீங்களா. நாம் தமிழர் கட்சியால் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது., 1000 கோடிக்கு டாஸ்மாக்கில் மது குடித்துள்ளனர். இது போல் கோடியை செலவிடுபவர்களுக்கு எதற்கு இலவசம். உங்கள் காசை எடுத்துக் கொடுப்பது எப்படி இலவசமாகும். நாம் தமிழர் கட்சி வந்தால் இலவசத்தை ஒழிப்பேன்.

இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை குறித்து நான் பேசியதால், அமைச்சர் செஞ்சி மஸ்தான் இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை தொடர்பாக ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது விரைவில் நல்ல செய்தி வரும் என தெரிவித்திருக்கிறார். புழு கூட நகர்கிறது ஆனால் இவர்கள் கூறும் குழு எதையும் செய்யவில்லை.

மோடி ஆவண படத்தை வெளியிட்டதால், மிரட்டுவதற்காக மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் ரைடு விடப்பட்டுள்ளது. நானும் அதை திரையிட்டேன். முடிந்தால் என் வீட்டுக்கு ரெய்டு அனுப்புங்கள். சிஏஏ, என்ஆர்சி, நீட் இவற்றையெல்லாம் கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ். அதற்கு ஒத்துழைத்தவர்கள் இந்த பேனா கம்பெனிதான.; பேனாவை உடைப்பியா என கேட்கிறார்கள் அதிகாரம் வரும்போது அடையாளங்களை பேத்தெரிவேன்.

தமிழர்கள் தான் இஸ்லாத்தையும், கிறிஸ்துவத்தையும் தழுவினார்கள். உங்களை சிறுபான்மையினர் என சொன்னால் நம்பாதீர்கள். ஹிந்திக்காரன் அடிப்பதைதான் பார்க்கிறீங்க தமிழர் ஒருநாள் அடிப்பான் பாருங்கள். மேனகாவிற்கு வாக்களியுங்கள் தமிழக சட்டசபைக்கு பெண் புலியை அனுப்புங்கள். என்கிட்ட காசு இல்ல ஆனால், விலையை ஏற்றி விடுவேன் நாங்கள் உங்கள் தெருவில் நடக்க நடக்க ஓட்டு விலை ஏறும் என்றவர், உன்னால் முடியும் தம்பி தம்பி என்ற பாடலை பாடி வாக்குகளை சேகரித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com