மதுரை
மதுரைபுதிய தலைமுறை

மதுரை | பேசுவதை நிறுத்தியதாக கூறி இளம்பெண்ணை கொலைவெறியுடன் தாக்கிய இளைஞர்.. பதைபதைக்கும் காட்சிகள்!

மதுரையில் காதலனிடம் பேச மறுத்த காதலி. காதலியின் வேலை செய்யும் இடத்திற்கு சென்று காதலியை சரமாறியாக தாக்கிய காதலனின் பரபரப்பு CCTV காட்சிகள் வெளியீடு.
Published on

செய்தியாளர்:மதுரை பிரசன்னா

மதுரை ஒத்தக்கடை அருகே சந்திரா நகரில் அமைந்துள்ள தனியார் GV.ஜெராக்ஸ் கடை கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதே கடையில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

இளம்பெண் தனது பள்ளியில் பயிலும் பொழுது சித்திக்ராஜா (25) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து மாத காலமாக சித்திக் ராஜாவுடன் பேசுவதை தவிர்த்து விட்டு இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சித்திக் ராஜா இளம் பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ச்சியாக மனரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கடையில் வேலை பார்த்து வந்த இளம் பெண்ணிடம் சித்திக் ராஜா தனது நண்பருடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், இளம்பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளார். அருகில் இருந்த அவரது நண்பர் தடுத்து நிறுத்தி அங்கிருந்து புறப்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அப்பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை
மோசமான வானிலை: அமைச்சர் எ.வ.வேலு உட்பட 77 பேர் பயணித்த விமானம் மதுரையில் தரையிறக்கம்!

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஒத்தக்கடை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்கள் என்ற திமிரில் இதுபோல் பெண்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கவை ஆகும். தன்னை ஏமாற்றிய ஆணை எந்த பெண்ணும் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்வதில்லை. திரும்பி அடிக்கமாட்டார்கள் என்றும் தெரிந்தும் ஒருவரை தாக்குவது மனிதத்தன்மையற்ற செயல்..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com