\
சாத்தூர்: நாட்டு வைத்தியம் பார்த்து விட்டு திரும்பிய சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழப்பு

சாத்தூர்: நாட்டு வைத்தியம் பார்த்து விட்டு திரும்பிய சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழப்பு

சாத்தூர்: நாட்டு வைத்தியம் பார்த்து விட்டு திரும்பிய சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழப்பு
Published on

சாத்தூரில் நாட்டு வைத்தியம் பார்த்து விட்டு திரும்பிச் சென்ற 10 வயது சிறுவன் உயிரிழந்தார். 

சாத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹரிஷ் (10). ஐந்தாம் வகுப்பு படித்து வந்த இவருக்கு, நான்கு நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், சிறுவனின் பெற்றோர் அவரை பட்டம்புதூர் பகுதிக்கு அழைத்துச் சென்று நாட்டு வைத்திய சிகிச்சை அளித்துள்ளனர். 

சிகிச்சை முடிந்து  திரும்பி கொண்டிருந்த போது, சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

உடனடியாக அவரது பெற்றோர் அருகிலிருந்த சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை சாத்தூர் அரசு மருத்துவமனைக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஹரிஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com