தடை செய்யப்பட்ட நாய் வகை: சிறுவனை கடித்துக் குதறிய வேட்டை நாய்!

தடை செய்யப்பட்ட நாய் வகை: சிறுவனை கடித்துக் குதறிய வேட்டை நாய்!

தடை செய்யப்பட்ட நாய் வகை: சிறுவனை கடித்துக் குதறிய வேட்டை நாய்!
Published on

ஆவடி அருகே தெருவில் சென்ற சிறுவனை வேட்டை நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

சென்னை அடுத்த ஆவடி அருகே மோரை பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது 9 வயது மகன் தெருவில் பக்கத்து வீட்டிற்கு தனது சைக்கிளில் சென்றுள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான ராட்வில்லர் எனும் வேட்டை நாய் சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளது. தலை மற்றும் கழுத்து பகுதியை கடித்துக் குதறியுள்ளது.

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த வேட்டை நாய் வகை குடியிருப்பு பகுதிகளில் வளர்க்க தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com