\
வீடியோ கால்
வீடியோ கால்pt web

சென்னை|"எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் பார்" - தோழியிடம் வீடியோ கால் பேசிய மாணவன் கால்தவறி உயிரிழப்பு

நான்காவது மாடியில் உள்ள வாட்டர் டேங்க் மீது ஏறி தனது பெண் தோழியிடம் வீடியோ கால் பேசியபோது கால் தவறி கீழே விழுந்து 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர் - ஜெ.அன்பரசன்

வடபழனி தங்கவேல் காலனி வடக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி. இவரது 13 வயது மகன் பிரஜன் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை தனது நண்பரான கார்த்திகேயன் என்பவரோடு சேர்ந்து படிப்பதற்காக வடபழனி அழகிரிநாதர் முதல் தெருவில் உள்ள பிளாசா மேனர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வந்துள்ளார்.

இந்த நிலையில் மதியம் மூன்று மணி அளவில் சிறுவன் பிரஜன் நான்காவது மாடியில் உள்ள வாட்டர் டேங்க் மீது ஏறி தனது பெண் தோழிக்கு கால் செய்து, "நான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் பார்" என வீடியோ கால் செய்து பேசியுள்ளார். வீடியோ கால் பேசிக்கொண்டிருந்தபோதே நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.

வீடியோ கால்
வச்ச குறி தப்பாது! பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா.. துப்பாக்கிச் சுடுதலில் மனுபாக்கர் சாதனை!

உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுவனின் உடல் ஆனது உடற்கூறு ஆய்வுக்காக ESI மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரணை.

வீடியோ கால்
சிவகங்கை | பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை.. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com