\
திருச்சி: செங்கல் ஏற்றிவந்த லாரியில் சிக்கி தந்தை கண்முன்னே 3 வயது சிறுவன் பலி

திருச்சி: செங்கல் ஏற்றிவந்த லாரியில் சிக்கி தந்தை கண்முன்னே 3 வயது சிறுவன் பலி

திருச்சி: செங்கல் ஏற்றிவந்த லாரியில் சிக்கி தந்தை கண்முன்னே 3 வயது சிறுவன் பலி
Published on

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அம்மாபட்டியில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பலியானது. 

துறையூரை அடுத்துள்ள அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ். இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதியினருக்கு லித்திஸ் என்கிற 3 வயது குழந்தையும், கைக்குழந்தை ஒன்றும் உள்ளது. இன்று காலை சுரேஷ் தனது மகனான லித்திஸுடன் காளிப்பட்டி கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்திருந்துள்ளார். அப்போது சேலம் மாவட்டம் பொட்டியாபுரம் கிராமத்தில் இருந்து அம்மாபட்டி கிராமத்திற்கு செங்கல் ஏற்றிவந்த லாரியின் பின் சக்கரத்தில் நிலைதடுமாறி சுரேசும், அவரது 3 வயது மகனும் விழுந்துள்ளனர்.

இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய லித்திஸ், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். தந்தை சுரேஷிற்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார் லித்திஸின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com