தவெக பொதுச் செயலாளர் ஆனந்திடம் கேள்வி கேட்ட பெண்
தவெக பொதுச் செயலாளர் ஆனந்திடம் கேள்வி கேட்ட பெண்pt desk

தவெக பொதுச் செயலாளர் ஆனந்திடம் கேள்வி கேட்ட பெண்ணை இழுத்துச் சென்ற பவுன்சர்கள் - காரணம் என்ன?

கும்பகோணத்தில் தவெக மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஆனந்திடம் குறையை தெரிவித்த பெண்ணை பவுன்சர்கள் இழுத்துச் சென்று கண்ணாடி அறையில் அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

செய்தியாளர்: விவேக்ராஜ்

தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பேசிக் கொண்டிருந்தபோது, மேடை அருகில் சென்ற பெண் ஒருவர், “என்னுடைய அண்ணன் சொத்தை விற்று விஜய் மக்கள் இயக்கத்தை வளர்த்தவர். ஆனால் அவரை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளது ஏன்?” என கேட்டு முறையிட்டார்.

பெண்ணை இழுத்துச் சென்ற பவுன்சர்கள்
பெண்ணை இழுத்துச் சென்ற பவுன்சர்கள் pt desk

அப்போது பாதுகாப்புக்காக வந்திருந்த பவுன்சர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து இழுத்துச் சென்று, மண்டபத்தில் உள்ள கண்ணாடி அறையில் அடைத்தனர். இதனை வீடியோ எடுக்க விடாமல் செய்தியாளர்களிடம் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தில் தஞ்சை மாவட்ட தலைவராக இருந்த தங்கதுரையின் தங்கை புஷ்பாதான் பொதுச்செயலாளர் ஆனந்திடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

தவெக பொதுச் செயலாளர் ஆனந்திடம் கேள்வி கேட்ட பெண்
ஹிஸ்புல்லாவின் தலைவரை தொடர்ந்து வீழ்த்தப்பட்ட முக்கிய தளபதி; போரை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம்?

இயக்கத்திற்காக தன்னுடைய இடத்தை விற்று செலவு செய்த தங்கதுரைக்கு, கட்சி தொடங்கிய பிறகு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com