போர்வெல் மூலம் துளையிடும் பணிகள் முடிந்தது

போர்வெல் மூலம் துளையிடும் பணிகள் முடிந்தது
போர்வெல் மூலம் துளையிடும் பணிகள் முடிந்தது

நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித்தை மீட்க போர்வெல் மூலம் துளையிடும் பணி முடிந்துள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் 68 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. கடினமானப் பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து நடந்து வருகிறது. 

ரிக் இயந்திரத்தால் பாறைகளை உடைக்க முடியாததால் போர்வெல் மூலம் பாறைகளைத் துளையிட்டு குழியை தோண்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போர்வெல் மூலம் துளையிடும் பணி தொடங்கியது. துளைகள் இடப்பட்டால் பாறைகள் நொறுக்கப்படும். பின்னர் ரிக் இயந்திரம் மூலம் எளிதாக குழி தோண்ட முடியும் என திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. மேற்கொண்டு பாறைகளை போர்வெல் துளையிட்டு வந்தது.


 
இந்நிலையில், போர்வெல் மூலம் துளையிடும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. ரிக் இயந்திரத்தால் 45 அடிக்கு தோண்டப்பட்ட குழியில் போர்வெல் மூலம் துளையிடும் பணி முடிந்த நிலையில் தற்போது இந்தத் துளைகள் ரிக் இயந்திரம் மூலம் அகலப்படுத்தப்படுகிறது. 

போர்வெல் மூலம் மொத்தம் 5 துளைகள் போடப்பட்டன. அதில் ஒரு துளை 40 அடி ஆழமும், மற்ற 4 துளைகள் 15 அடி ஆழமும் தோண்டப்பட்டன. அதேபோல், குழந்தையின் மீது படிந்துள்ள மணலை உறிஞ்சி எடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com