மீட்புப் போராட்டம்: போர்வெல் மூலம் பாறையை உடைக்க புதிய திட்டம்!

மீட்புப் போராட்டம்: போர்வெல் மூலம் பாறையை உடைக்க புதிய திட்டம்!
மீட்புப் போராட்டம்: போர்வெல் மூலம் பாறையை உடைக்க புதிய திட்டம்!

குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக போர்வெல் மூலம் பாறையை துளையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 65 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. கடினமானப் பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து நடந்து வருகிறது. 

ரிக் இயந்திரம் தொடர்ந்து குழி தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது 45 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து குழி தோண்டப்படும் என வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுர்ஜித் மீட்புப்பணி நடைபெறும் நடுக்காட்டுப்பட்டி பகுதியில் லேசாக மழை பெய்து வருகிறது. சாரல் மழை சற்று பலமாக பெய்த நிலையில் தற்போது மீண்டும் லேசாக மழை பெய்கிறது. மழை பெய்தாலும் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறும் என ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ரிக் இயந்திரத்தால் பாறைகளை உடைக்க முடியாததால் போர்வெல் மூலம் பாறைகளைத் துளையிட்டு குழியை தோண்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போர்வெல் மூலம் துளையிடும் பணி தொடங்கியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com