தமிழ்நாடு
தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்
தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்
தமிழகத்தில் இயக்கப்படவுள்ள 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 7-ஆம் தேதி முதல் மாநிலத்திற்குள் மீண்டும் ரயில் சேவை தொடங்கிறது. சென்னையில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கும், மறுமார்க்கத்தில் இப்பகுதிகளில் இருந்து சென்னைக்கும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மொத்தம் 13 ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. அனைத்துப் பயணிகளும் பயண நேரத்திற்கு 90 நிமிடங்கள் முன்னதாக ரயில் நிலையம் வர வேண்டும் என்றும், கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.