சென்னை: பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கான பிரெய்லி வடிவில் வெளியான முதல் கவிதை நூல்!

சென்னை: பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கான பிரெய்லி வடிவில் வெளியான முதல் கவிதை நூல்!

சென்னை: பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கான பிரெய்லி வடிவில் வெளியான முதல் கவிதை நூல்!
Published on

என்னதான் டிஜிட்டல் உலகம் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும், கையில் புத்தகத்தை வைத்து அதன் வாசனையோடு ஒரு படைப்பை வாசித்தல் என்பது தனி அனுபவம். அதுவே நல்ல வாசிப்பாளர்கள் பலரது தேர்வாக இன்றளவும் உள்ளது. முன்பை விடவும் சமீபத்தில் நிறைய இலக்கிய நிகழ்வுகள் நடைபெறத்துவங்கி இருக்கின்றன. நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மதன் எஸ் ராஜா என்பவர் ‘கசடு’ எனும் கவிதைத் தொகுப்பை எழுதியிருக்கிறார். எழுத்தாளர் லதா என்பவரின் ‘நோ ராப் இம்ப்ரின்ட்ஸ் பதிப்பகம்’ மூலமாக இந்நூல் வெளியிடப்பட்டது. ஆழ்வார்பேட்டை கவிக்கோ அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் பேராசிரியர் அ.முத்துவேலு, முனைவர் தமிழ்மணவாளன், கரன் கார்க்கி, முனைவர் நெல்லை பி.சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் வாசகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். எழுதாளர் ஜானு இந்நிகழ்சியை தொகுத்து வழங்கினார். பார்வை குறைப்படுள்ள தம்பதிகளான ஆசிரியர் மு.சோபனா மற்றும் டாக்டர் உ.மகேந்திரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆசிரியர் மு.சோபனா பிரெயிலி வடிவிலான கசடு நூலை வாசித்துக் காட்டியது புதிய அனுபவமாக வந்திருந்தவர்களுக்கு அமைந்தது.

கசடு எனும் இந்த கவிதை நூல் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் வாசிக்க வசதியாக பிரெய்லி வடிவத்திலும் வெளியிடப்பட்டது. இந்திய அளவில் ஒரு கவிதை நூல் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் பிரெய்லியில் வெளியாகியிருப்பது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது. இந்த நல்ல முயற்சியின் மூலம் பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் நல்ல இலக்கிய வாசிப்பு அனுபவத்தை பெற முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com