
நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் வந்த இந்த மிரட்டலையடுத்து சாந்தோமில் உள்ள குஷ்பூவின் வீட்டிற்கு வந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்தினர். வெடிகுண்டு எதுவும் இல்லாததையடுத்து, போலீசார் மிரட்டல் நபரின் தொலைபேசி அழைப்பு பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது குஷ்பு குடும்பத்துடன் வெளிநாட்டில் இருக்கிறார்.