எலியட்ஸ் கடற்கரை
எலியட்ஸ் கடற்கரைpt wep

"30இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளேன்"-மிரட்டல் விடுத்த மர்ம நபர்; மோப்பநாயுடன் களமிறங்கிய காவலர்கள்!

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

சென்னை , பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை, உள்ளிட்ட 30 இடங்களில் குண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் டிஜிபி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

மின்னஞ்சல் அனுப்பியதோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர், "பெசன்ட் நகரில் குண்டு வைத்துள்ளேன் எடுத்துக்கொள்ளுங்கள்" எனக் கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை,உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய், மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்ற போலீசார் அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார், மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்தும், செல்போனில் தொடர்பு கொண்ட நபர் குறித்தும், செல்போன் நம்பரை வைத்து மிரட்டல் விடுத்த நபரைத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com