\
கோப்புப்படம்
கோப்புப்படம்pt web

வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக வந்த மிரட்டல்; 67 பயணிகள் இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பதற்றம்

சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்ததால், அங்கு பதற்றம் நிலவியது.
Published on

சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம், பிற்பகல் 2 மணிக்கு, புறப்படத் தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, ஸ்பைஸ் ஜெட் அலுவலகத்திற்கு மிரட்டல் வந்தது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

இதனால், உடனடியாக அந்த விமானத்திற்கு மோப்பநாய்களுடன் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள், சோதனை நடத்தினர். ஆனால் அந்த விமானத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த பதற்றங்கள் காரணமாக, 2 மணிக்கு புறப்பட்டிருக்க வேண்டிய அந்த விமானம், இரண்டரை மணி நேர தாமதத்துக்குப் பிறகு, 67 பயணிகளுடன், அந்தமான் நோக்கி புறப்பட்டு பறந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com