நெல்லை ரயில்நிலையம்PT
தமிழ்நாடு
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! ரயில்வே பாதுகாப்பு படை தீவிர சோதனை!
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலையடுத்து நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை ரயில்நிலையம்
உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் மோப்பநாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.