Bomb treatpt desk
தமிழ்நாடு
சென்னை MIT கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனைக்குப் பிறகு புரளி என தகவல்...
குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரிக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்... சோதனைக்கு பின் புரளி என தெரியவந்துள்ளது.
செய்தியாளா: சாந்தகுமார்
சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில் சிட்லபாக்கம் காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் கல்லூரிக்குச் சென்று சோதனை செய்தனர்.
Bomb treatpt desk
கல்லூரி முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனை செய்யப்பட்டது. அதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சிட்லபாக்கம் காவல்துறையினர் 504, 507 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.