சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மக்கள் வெளியேற்றம்

சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மக்கள் வெளியேற்றம்

சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மக்கள் வெளியேற்றம்
Published on

சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாள்தோறும் பரபரப்பாக காணப்படும் முக்கிய இடங்களில் ஒன்று தி.நகர் ரங்கநாதன் தெரு. இத்தெருவில் ஏராளமான கடைகள் உள்ளதால் நாள்தோறும் இங்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வருவதுண்டு. அத்தோடு மட்டுமில்லாமல் தெருக்களிலும் ஏராளமானோர் சின்னச் சின்ன கடைகள் வைத்து வியாபாரம் செய்வார்கள். இந்தத் தெருவில் பிரபலமான சரவணா ஸ்டோர் கடையும் உள்ளது. இக்கடையிலும் நாள்தோறும் அதிகம் கூட்டம் காணப்படும். சனி, ஞாயிறு என்றால் ரங்கநாதன் தெருவில் வழக்கத்தைவிட சற்று அதிகமாகத்தான் கூட்டம் இருக்கும்.

இந்நிலையில் சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடையில் வேலை செய்பவர்கள் மற்றும் கடையில் பொருட்கள் வாங்க வந்தவர்கள் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடையில் வெடிகுண்டு ஏதேனும் இருக்கிறதா என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com