\
முதலமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

முதலமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

முதலமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
Published on

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வீட்டுக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து விடும் எனவும் தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் சிலர் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர் அங்கு குவிந்து, வெடிகுண்டு பரிசோதனையாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் நாராயணசாமி வீடு முழுவதும் வெடிகுண்டு சோதனை நடைபெற்றது.

சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், அந்த மிரட்டல் புரளி என்பதும் தெரியவந்தது. இதனால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும் நாராயணசாமி வீட்டுக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரத்தை சேர்ந்த புவனேஷ்குமார் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அந்த நபர் தலைமறைவாகியுள்ளதால், அவரது தந்தையிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com