\
அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் ! மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் ! மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் ! மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு இன்று காலை செல்போனில் அழைத்த அடையாளம் தெரியாத நபர் மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.  இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணைக் கொண்டு அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com