நெல்லையில் காவல்நிலையம் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு! போலீஸ் குவிப்பு!

நெல்லையில் காவல்நிலையம் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு! போலீஸ் குவிப்பு!

நெல்லையில் காவல்நிலையம் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு! போலீஸ் குவிப்பு!
Published on

நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தேவேந்திரர் குல எழுச்சி இயக்கம் தலைவர் கண்ணபிரான் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திடுவதற்காக நெல்லை தச்சநல்லூா் காவல்நிலையம் வந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு  வீசினர்.  காவல்நிலையம் அருகே, கண்ணபிரான் வீட்டின் முன்பு மற்றும் காவல்நிலையம் அருகே உள்ள கோயில் முன்பு என மொத்தம் 4 நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்பு போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் யாருக்கும் காயமில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com