பாடி பில்டர்ஸ் ஆடும் ஜிமிக்கி கம்மல் வைரல் வீடியோ
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு பாடி பில்டர்ஸ் ஆடும் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
மோகன்லால் நடிப்பில் வெளியான ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ என்ற படத்தில் ‘எண்டம்மையிட ஜிமிக்கி கம்மல்’ பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அந்தப் பாடலை பயன்படுத்தி மாணவிகளும் ஆசிரியைகளும் ஆடும் ஒரு வீடியே சில மாதம் முன்பு வெளியானது. அந்தப் பாடல் வெளியான சில நாட்களில் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. உலகம் முழுக்க அந்தப் பாடலை பயன்படுத்தி பலரும் ஒரு வீடியோவை பதிவிட்டனர். அதற்கு நன்றி தெரிவித்து மோகன்லால் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்தப் பாடலின் தாக்கம் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை.
இந்நிலையில் கல்லூரி மாணவர்களான பாடி பில்டர்ஸ் பலரும் சேர்ந்து ஜிமிக்கி கம்மல் படலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது. பாடி பில்டர்ஸ் சட்டையே போடாமல் ஆர்ம்ஸ் காட்டிக் கொண்டு வேட்டியில் போட்டுள்ள இந்த நடனம் தற்சமயம் பலரையும் ஈர்த்து வருகிறது.