போடி: மாட்டு வண்டி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி

போடி: மாட்டு வண்டி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி

போடி: மாட்டு வண்டி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி
Published on

போடி - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் போடி - மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று நள்ளிரவு முந்தல் பகுதியில் இருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு மாட்டு வண்டி வந்துள்ளது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த போடி புதுகாலனி பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமார் (27), பிரபாகரன் (28) ஆகிய 2 இளைஞர்கள் மாட்டு வண்டியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதி கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அவர்களுடன் வந்த நண்பர்கள் அவர்களை மீட்டு போடி அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தகவலறிந்த போடி நகர் காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com