போடி: பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டதால் விபரீத முடிவெடுத்த சிறுமி

போடி: பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டதால் விபரீத முடிவெடுத்த சிறுமி
போடி: பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டதால் விபரீத முடிவெடுத்த சிறுமி

போடி அருகே பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டதால் மனமுடைந்த சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி மின்வாரிய அலுவலகம் அருகே வசித்து வருபவர்கள் இருளாண்டி - விஜயா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் ஷாலினிக்கு திருமணமான நிலையில், 2வது மகள் ஜனனி (14) போடியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் சிறுமியின் தாய் மற்றும் தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி மனமுடைந்து இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போடி நகர் காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு, சிறுமி தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றி சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com