உள்நோயாளிகளுக்கு ரத்தம் தேவை: இன்று திருச்சியில் ரத்ததான முகாம்!

உள்நோயாளிகளுக்கு ரத்தம் தேவை: இன்று திருச்சியில் ரத்ததான முகாம்!
உள்நோயாளிகளுக்கு ரத்தம் தேவை: இன்று திருச்சியில் ரத்ததான முகாம்!

திருச்சி அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக உள்ளவர்களுக்கு ரத்தம் தேவைப்படுவதால் இன்று ரத்ததான முகாம் நடத்தப்பட
உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. இந்நிலையில் மருத்துவமனைகளில் ரத்ததானம் குறைந்துள்ளது. உள்நோயாளிகளுக்கு ரத்தம் கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு இன்று ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், திருச்சி அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பிற சிகிச்சைகள்
பெறுபவர்களுக்கு அவசர கால தேவையின் பொருட்டு ரத்தம் தேவைப்படுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, திருச்சி தேசியக் கல்லூரியில், சிறப்பு ரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.

எனவே இன்று நடைபெறும் ரத்ததான முகாமில் தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், ரத்ததானம் செய்ய விரும்புவோர் தேசிய கல்லூரிக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், இந்த முகாம் கொரோனா குறித்த அரசு விதிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு பாதுகாப்புடன் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 9443182847, 9941021399 , 9965519761 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com