தமிழ்நாடு
நீரோட்டத்தை தடுத்தால் வெள்ளம் வரும்: விஞ்ஞானி எச்சரிக்கை!
நீரோட்டத்தை தடுத்தால் வெள்ளம் வரும்: விஞ்ஞானி எச்சரிக்கை!
எண்ணூரில் கடலுக்குச் செல்லும் நீரோட்டம் தடைபட்டால் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானி சுந்தர் ராமநாதன் எச்சரித்துள்ளார்.
எண்ணூரில் 350 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலமும் கொண்ட டான்ஜெட்கோ சாலை அமைந்துள்ளது. இந்த சாலை மத்திய அரசிடமும், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை வாரியத்திடமும் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளதாக சுந்தர் ராமநாதன் என்ற விஞ்ஞானி குற்றம்சாட்டியுள்ளார். இதனால், கடலுக்குச் செல்லும் நீரோட்டம் தடைபட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நீரோட்டத்தை அடைத்துக் கட்டடப்பட்டுள்ள இந்த சாலையினால் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் விஞ்ஞானி சுந்தர் ராமநாதன் எச்சரித்துள்ளார்.