\
கண்ணை கட்டிக்கொண்டு சிலம்பம்: மாணவர்கள் கின்னஸ் சாதனை முயற்சி

கண்ணை கட்டிக்கொண்டு சிலம்பம்: மாணவர்கள் கின்னஸ் சாதனை முயற்சி

கண்ணை கட்டிக்கொண்டு சிலம்பம்: மாணவர்கள் கின்னஸ் சாதனை முயற்சி
Published on

மேட்டூரில் கண்ணை கட்டிக் கொண்டு சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை முயற்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.

மேட்டூர் சதுரங்காடியில் உள்ள பொதுஜன சேவா சங்க துவக்க பள்ளியில் ஜிம் கெல்லி அகாடமி ஆஃப் கராத்தே பெடரேசன் மற்றும் மேட்டூர் சிலம்பாட்ட சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் அச்சீவர் புக் ஆஃப் ரெக்கார்டு குழுவினர் துவக்கி வைத்தனர்.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக 3 முதல் 24 வயது வரையிலான 70 மாணவ - மாணவிகள் தொடர்ந்து 2மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றினர். போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு ஆல் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட் பிரசிடெண்ட் சரவணன், பவுன்டர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com