பார்வையின்றி சாதிக்கும் ஆங்கில ஆசிரியை!

பார்வையின்றி சாதிக்கும் ஆங்கில ஆசிரியை!

பார்வையின்றி சாதிக்கும் ஆங்கில ஆசிரியை!
Published on

பார்வையற்ற பெண் ஆசிரியை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்பித்து அசத்தி வருகிறார்.

பெரம்பலூர் மாவட்டம் பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள யூனியன் நடுநிலைப்பள்ளியில் 107 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பாப்பாத்தி என்ற பார்வைத்திறன் குறைபாடு உடைய ஆசிரியை 2012ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். ஆங்கிலத்தில் எம்.ஏ., பி.எட் முடித்துள்ள இவர், மாணவர்களுக்கு எளிமையாக ஆங்கிலம் புரியும் படி பாடம் நடத்தி சாதித்து வருகிறார். தனியார் பள்ளி மாணவர்களுடன் அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டியிடும் வகையில் இவரது ஆங்கிலம் போதிக்கும் திறன் உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com