சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று பாய்ந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை அடிக்கடி கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இங்குள்ள புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 120 ஐ தாண்டியுள்ளதாக அண்மையில் வனவிலங் குகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தையுடன் கருஞ்சிறுத்தையும் தாவி குதித்தும் ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது. காட்டில் இரு சிறுத்தைகளும் விளையாடிக்கொண்டு தாவி குதித்தும் ஓடுகிறது. அடர்ந்த பச்சை பசலென காட்டுப்பகுதியில் விளையாடும் இந்த காட்சி சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் முதன் முதலாக கருஞ்சிறுத்தை தென்பட்டதாக வெளியான வீடியோவை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.