முதுமலை வனப்பகுதியில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்று உலா வருவது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 55 சதவீதம் வனப்பகுதிகள் நிறைந்துள்ளன. இதில் குறிப்பாக முதுமலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் சாலை ஓரத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று உலாவி கொண்டிருந்ததையும், அங்குள்ள சிறிய குட்டையில் தண்ணீர் பருகுவதையும் அவ்வழியாக பயணித்த சுற்றுலாப்பயணிகள் படம்பிடித்து பகிர்ந்து வருகின்றனர்.
அப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது மீண்டும் கருஞ்சிறுத்தை உலா வருவது சுற்றுலாப்பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்யை அளித்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.