ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - கருப்புப்பெட்டி கண்டெடுப்பு

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - கருப்புப்பெட்டி கண்டெடுப்பு
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - கருப்புப்பெட்டி கண்டெடுப்பு

குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் காட்டேரி நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விபத்து நடத்த இடமானது மதியம் 3 மணியளவில் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு அங்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டியை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. டெல்லியிலிருந்து வந்த தொழில்நுட்பக்குழு, வெலிங்டன் ராணுவ மையக்குழு கருப்புப்பெட்டியை கண்டெடுத்தது.

கருப்புப்பெட்டியை பெங்களூரு அல்லது டெல்லி கொண்டுசென்று ஆய்வுசெய்ய முடிவு செய்துள்ளது. இதனை வைத்து விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது எப்படி? என்பது குறித்த விவரங்களை கண்டறியவுள்ளது. விமான கட்டுப்பாட்டு அறையுடன் விமானியின் பேச்சு பதிவு அடங்கிய கருப்புப்பெட்டியை ஆய்வுசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com