தமிழ்நாடு
சிஏஏ எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு - பாஜக வெளிநடப்பு
சிஏஏ எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு - பாஜக வெளிநடப்பு
குடியுரிமை திருத்தச்சட்டத்தை ரத்துசெய்யக்கோரும் தீர்மானத்தை கண்டித்து பேரவையிலிருந்து பாரதிய ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்திற்கு பாஜகவின் 4 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என, பாஜகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலன் கருதி எந்த சட்டத்தை கொண்டு வரவும் அரசியலமைப்பில் இடம் இருப்பதால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகக் கூறினார்.