தமிழ்நாடு
“வாஜ்பாய்க்கு இரங்கல் இல்லையா!” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம்
“வாஜ்பாய்க்கு இரங்கல் இல்லையா!” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிக்காத நடிகர் சங்கத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை, “இன்று நடிகர் சங்க செயற்குழுவில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது போலவே, முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வேண்டுமென நடிகர் சங்க உறுப்பினரும், பாஜக கலை அணிச் செயலாளருமான சத்யன் சுட்டிக்காட்டிய பின்னரும் மறுத்தது கண்டனத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.