"அரசின் வழிகாட்டுதலின்படி விநாயகர் சதுர்த்தி விழா" எல்.முருகன்
இந்து முன்னணியின் வழியில் நாளை பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்ச்சி விழாவை மக்கள் வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் கொண்டு சென்று சிலையை கரைக்கவும் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
ஆனால் அரசு விதித்த உத்தரவிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால் தனிநபர் வைத்துள்ள விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதில் இந்து முன்னணியின் நிலைப்பாடே தங்கள் நிலைப்பாடு என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஆனால் அரசின் வழிகாட்டுதலின்படி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.