\
'அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி' - அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்

'அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி' - அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்

'அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி' - அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்
Published on

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி குறித்து என்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என அமைச்சர் செந்தில்பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்தார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ''எதில் அரசியல் செய்ய வேண்டும்? மக்களுக்கான கருத்தை எதில் முன்னெடுக்க வேண்டும்? என்ற பண்பு ஒரு அரசியல்வாதியிடம் இருக்க வேண்டும். அந்த பண்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் இல்லை. அதனால் அரசியல் கோமாளி சார்ந்த கேள்விகளை இனிவரும் நாட்களில் தவிர்க்கவும். அதற்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம். இது அரசு நிகழ்ச்சி. இந்த அரசு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், ஆணையர் எல்லோருமே இருக்கின்றனர்'' என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com