\
பிரதமர் மோடிக்கு நாளை பிறந்த நாள்: இலவசமாக மீன்கள் வழங்கிய நமீதா.!

பிரதமர் மோடிக்கு நாளை பிறந்த நாள்: இலவசமாக மீன்கள் வழங்கிய நமீதா.!

பிரதமர் மோடிக்கு நாளை பிறந்த நாள்: இலவசமாக மீன்கள் வழங்கிய நமீதா.!
Published on

பிரதமர் மோடியின் நடவடிக்கையால் காணாமல் போன தமிழக மீனவர்கள் காப்பாற்றப்பட்டதாக பாரதிய‌ ஜனதா கட்சியின் உறுப்பினரும், நடிகையுமான நமீதா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 70தாவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து பாஜகவினர் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில், தமிழக பாரதிய ஜனதா கட்சி மீனவர் அணி சார்பில், பொதுமக்களுக்கு இலவசமாக மீன்கள் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகை நமீதா, மீன்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் பாஜகவில் இணைந்த பின்பு முதல் முறையாக இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இந்தியா முழுவதும் உள்ள மீனவர்களுக்காக 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காணாமல் போன 10 மீனவர்களை காப்பாற்ற பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே, பிரதமர் மோடிக்கு பிறந்ந நாள் வாழ்த்துகள் மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com