“செந்தில் பாலாஜியை போல் அல்லாமல், அமைச்சர் பொன்முடி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” - சீனிவாசன், பாஜக

அமைச்சர் பொன்முடி விஷயத்தில் திமுக அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் பாஜகவின் சீனிவாசன்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி திடீர் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அன்றிரவே அவரைக் கைது செய்தனர். இந்த வேளையில்தான், தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.

அமைச்சர் பொன்முடி இல்லம் - அமலாக்கத்துறை ரெய்டு
அமைச்சர் பொன்முடி இல்லம் - அமலாக்கத்துறை ரெய்டுபுதிய தலைமுறை

சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனி மற்றும் விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், பொன்முடியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் பொன்முடி - பாஜக சீனிவாசன்
அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் அடுத்ததாக அமைச்சர் பொன்முடி!

அமலாக்கத்துறையினரின் இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாஜகவைச் சேர்ந்த சீனிவாசன், ''செந்தில் பாலாஜி விஷயத்தில் செய்தது போல் இல்லாமல் அமைச்சர் பொன்முடி விஷயத்தில் திமுக அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அமைச்சர் பொன்முடியும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அமலாக்கத்துறை தனது கடமையை செய்கிறது. வலுவான ஆதாரம் இல்லாமல் அவர்கள் சோதனை நடத்த மாட்டார்கள்'' என தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com