BJP Releases Star Campaigners List for Tamil Nadu Elections
பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள்Pt web

தமிழக தேர்தல்| Full Force-ஐ இறக்கும் பாஜக.. 6 மாநில முதல்வர்கள் பரப்புரை!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நட்சத்திரப் பரப்புரையாளர்களின் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் 6 மாநில முதல்வர்கள் உட்பட 39 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இது குறித்துப் பார்க்கலாம்.
Published on
Summary

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, வேட்பாளர் அறிவிப்பை தாமதமாக வெளியிட்ட நிலையில், இப்போது 39 நட்சத்திரப் பரப்புரையாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன்(ஏப்ரல் 6) முடிவடைகிறது. 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ள திமுக தொடர்ச்சியாக 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேபோல, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறார். அதன்படி, 169 இடங்களில் அதிமுக நேரடியாக களம் காணும் நிலையில், மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு 27 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது.

கே. பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன்
கே. பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் கோப்புபடம்

எனினும் அதிமுக ஒதுக்கிய 27 தொகுதிகளில் சிலவற்றை மாற்றித் தரக்கோருவது, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மேலிடம் அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் அறிவிப்பு தொடர்ந்து தள்ளிப்போய் வந்த சூழலில் தான், நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌதரராஜன், அவிநாசியில் எல். முருகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை.

BJP Releases Star Campaigners List for Tamil Nadu Elections
வேட்பாளர் பட்டியல் வெளியீடு| யார் யார் எங்கே? அண்ணாமலைக்கு சீட் தராத பாஜக!

இந்த சூழலில் தான் இன்று பாஜக சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரையில் ஈடுபடவுள்ள நட்சத்திரப் பரப்புரையாளர்களில் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட 39 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அப்பட்டியலில், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், நிதின் கட்கரி உள்ளிட்ட 10 மத்திய அமைச்சர்களின் பெயர்களும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

அதேபோல இந்தப் பட்டியலில், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், குஷ்பு, சரத்குமார், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

BJP Releases Star Campaigners List for Tamil Nadu Elections
நான்கு முனைப் போட்டியில் எழும்பூர்.. மீண்டும் தொகுதியை தக்கவைக்குமா திமுக?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com