\
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு - சென்னையில் பாஜகவினர் பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு - சென்னையில் பாஜகவினர் பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு - சென்னையில் பாஜகவினர் பேரணி
Published on

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜகவினர் பேரணியாக சென்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி, உத்தரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் வன்முறைகளும் ஏற்பட்டு, 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதவிர அரசியல் தலைவர்கள் பலரும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர்.

இதுஒருபுறம் இருக்க மற்றொருபுறம் பாஜகவினர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பிரச்சாரம் மற்றும் பேரணியை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் கோவை உள்ளிட்ட இடங்களில் ஆதரவு பேரணிகள் நடத்தப்பட்டன. உள்துறை அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பாஜகவினர் சார்பில் குடியுரிமை சட்டத்திருத்த ஆதரவு பேரணி நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன் மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com