\
எஸ்.ஐ-க்கு கொலை மிரட்டல்..! - பாஜக பிரமுகர் கைது

எஸ்.ஐ-க்கு கொலை மிரட்டல்..! - பாஜக பிரமுகர் கைது

எஸ்.ஐ-க்கு கொலை மிரட்டல்..! - பாஜக பிரமுகர் கைது
Published on

மயிலாடுதுறையில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த மாதம் 31-ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் முப்பெரும் விழா பேரணி நடைபெற்றது. இதில் பேசிய பாஜக பிரமுகர் அகோரம், மயிலாடுதுறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும், அவரது காக்கிச் சட்டையைக் கழட்டிவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

இதுகுறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, அவதூறாக திட்டியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த அகோரம் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com