மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடைச் செய்ய வலியுறுத்தி திருச்செந்தூரில் கோவில் வளாகத்தில் துண்டு பிரசுரம் வழங்கிய அய்யாக்கண்ணுவை, பா.ஜ.க. பெண் நிர்வாகி நெல்லையம்மாள் கண்ணத்தில் அறைந்தார்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு. இவர் தலைமையிலான விவசாயிகள் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள பக்தர்களிடம் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக துண்டு பிரசுரத்தை வழங்கினர். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி பொதுச் செயலாளர் நெல்லையம்மாள், விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு மோசடியாளர் என கூறி துண்டு பிரசுரம் கொடுப்பதை தடுத்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அய்யாக்கண்ணு தகாத வார்த்தையை பயன்படுத்தியதால், பாஜக பெண் நிர்வாகி நெல்லையம்மாள், அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அரைந்தார்.
இந்தத் தாக்குதலுக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதி பூங்காவான தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.