அனுமதியின்றி ஆன்மிக பேரணி- பாஜகவினர் கைது

அனுமதியின்றி ஆன்மிக பேரணி- பாஜகவினர் கைது

அனுமதியின்றி ஆன்மிக பேரணி- பாஜகவினர் கைது
Published on

சேலத்தில் ராமர், சீதை படங்களுடன் அனுமதியின்றி ஆன்மிக பேரணி செல்ல முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்தான் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்நிலையில், 1971-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி செவ்வாய்பேட்டையில் திராவிடக் கழக பேரணி நடந்த பகுதியில் பாஜகவினர் ராமர், சீதை படங்களுடன் பேரணி செல்ல முயற்சி செய்தனர். பேரணி செல்ல முயன்றவர்களை தடுத்ததால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றது. இதையடுத்து பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com