தமிழ்நாடு
அதிமுக தனித்து செயல்பட வேண்டும் - பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி
அதிமுக தனித்து செயல்பட வேண்டும் - பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி
தமிழகத்தில் அதிமுக தனித்து செயல்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக வளரவேண்டுமெனில் இந்துத்துவாவை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்து தீவிரவாதம் வளர்ந்து வருகிறது என்று கூறிய ப.சிதம்பரத்திற்கு தக்க பதில் கிடைத்துள்ளதாகவும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அதிமுக பாஜவுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில், அதிமுக தனித்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.