Vanathi srinivasan
Vanathi srinivasanpt desk

ரஃபேல் வாட்ச்: பில் தானே கேட்டிங்க? சீரியல் நம்பரா கேட்டீங்க? வானதி சீனிவாசன் கேள்வி!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் ரஃபேல் வாட்ச் பில் கேட்டீர்கள் பில் வந்ததா இல்லையா என வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
Published on

கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தெற்கு தொகுதிக்குட்பட்ட திருக்கோவில்கள் மேம்பாட்டிற்காக ஆலயம் எனும் திட்டத்தை துவக்கி வைத்தார். முதற்கட்டமாக சுமார் 20 கோவில்களுக்கு தலா 5 லிட்டர் தீப எண்ணெய்யை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து கோவில்களுக்கும் மாதம் ஐந்து லிட்டர் தீப எண்ணெய் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கோவில்களை ஒருங்கிணைக்கும் தன்னார்வக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. தொகுதியிலுள்ள 20 கோவில்களுக்கு மாதம் தோறும் தீப எண்ணெய் வழங்குவது உட்பட கோவில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வது என தீர்மானித்துள்ளோம்.

கோவிலில் பூக்கட்டும் பெண்களுக்கு அரசின் திட்டங்களை பெற்றுத் தரும் பணிகளும் மேற்கொள்ளப்படும். நிறைய இடங்களில் கோவில்களுக்கு வருமானம் இல்லாத நிலையில் பூஜை முறைகளிலிருந்து விலகிச் செல்வதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

எந்த சூழலிலும் கோவில்களில் விளக்கெரியாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இப்பணியை துவங்கியுள்ளோம். வரக்கூடிய காலங்களில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும். தீப ஒளியை போல் இந்த தொகுதி மக்களின் வாழ்விலும் ஒளி உண்டாகும். பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் மக்கள் மன்றத்தின் முன்பு விவாத பொருளாக உள்ளது.

தமிழக அரசியலில் விவாதத்தை மாநில தலைவர் வைத்துள்ளார். எதையும் சந்திக்க தயார் எனக் கூறி திமுக தலைவர்களின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என திமுகவினர் நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது.

அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்... பில் கேட்டீர்கள் பில் வந்ததா? இல்லையா? பில் கேட்டீர்கள்.. பில் சீரியல் நம்பர் கேட்டீர்களா? எனவும் பதில் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com